Latestமலேசியா

கோர விபத்தில் சந்திரன் பலியான பரிதாபம்!

பேராங், மார்ச். 18 – ஈப்போ-கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்த, 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சாலையின் 120 கிலோ மீட்டரில் நேற்று இரவு 8.30 மணியளவில் நேர்ந்த விபத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனத்தின் புரோபெல் ஊழியரான ஆர்.சந்திரன் (வயது 49) என்பவர் மரணமடைந்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

தொடக்கக்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்ற சந்திரன் வாகனம் ஒன்றை முந்திச் செல்வதில் தோல்வியடைந்து, எதிரே வந்த வாகனத்தை மோதினார்.

ராணுவ வீரர் தம் முன்னே வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முனைந்தபோது, அதனை மோதித் தள்ளியதோடு எதிரே வந்த பஜீரோவையும் மோதினார். கீழே விழுந்த சந்திரனின் மேல் பஜீரோவின் டயர் ஏறியது. இதனால் அவரது கால் துண்டிக்கப்பட்டது.

பேராங்கிலிருந்து தஞ்சோங் மாலிமிற்கு சென்ற ஜீப்பை 63 வயதான ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஓட்டி வந்த வேளையில், பெரோடுவா வாகனத்தை 29 வயதான இராணுவ வீரர் ஈப்போவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அந்த விபத்தில் இரு வாகன ஓட்டுநர்களும் காயமடைவில்லை என வான் கமாருல் தெரிவித்தார். சந்திரனின் உடல் சவ பரிசோதனைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த விபத்து 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)இன் கீழ் விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker