Latestமலேசியா

சுபாங்கில்  விமானத்தை மோதிய வாகனம்!  -ஓட்டுனர் படுகாயம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 18 – இன்று அதிகாலையில் சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலைய பொறியியல் பிரிவின் வாகனம் ஒன்று தனியார் விமானத்தை மோதிய விபத்தில்,  ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

அதிகாலை 3.20 மணியளவில் நடந்த அந்த விபத்தில் வாகன ஓட்டுநர் கடுமையாகக் காயமடைந்ததாக மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து,  கண்காணிப்புப் பிரிவில்  தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் சிப்பந்திகளும் பயணிகளும் காயமின்றி தப்பியுள்ளனர். துப்புரவுப் பணிகளை முடிக்க நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், சில விமானங்கள் தரையிறங்க தாமதம் ஏற்பட்டது. எனினும், விமான நிலையம் காலை 9 மணிக்கு சகஜ நிலைக்குத் திரும்பியது.

இந்த விபத்து பற்றி மலேசிய ஏர்போர்ட் சிறப்பு விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் வேளையில், போக்குவரத்து அமைச்சும் துல்லிய ஆய்வினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker