Latestமலேசியா

தமிழ்மொழி, வாழ்வியலின் அடிப்படை: பேரா ரிவர் வேலி தமிழ்ப்பள்ளி  விழா!

கோலகங்சார், மார்ச். 18- “மற்ற இனத்தவர் தங்களின் தாய்மொழியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நாம் உலகின் தாய்மொழியில் பேசுகிறோம். ஆகையால் தமிழ்மொழி கல்வியில் மட்டுமில்லாமல் வாழ்வியலிலும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் பேரா ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி அளவிலான தாய்மொழி நாள், தமிழ் மொழி வாரம் கொண்டாடப்பட்டது.

தமிழ்மொழி பாடக் குழு ஏற்பாட்டில் ஒவ்வோர் ஆண்டும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இவ்விழாவில் நாப்பிறல் போட்டி, கையெழுத்துப் போட்டி, புதிர்ப்போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, பாடல் போட்டி, கதைக் கூறும் போட்டி ஆகியன மிகச் சிறப்பான முறையில் மாணவர்களால் பங்கெடுக்கப்பட்டன.

தாய்மொழி காக்கப்பட வேண்டும். இன மொழி உணர்வு பள்ளிப் பருவத்திலேயே விதைக்கபட வேண்டும். அப்படி செய்தால்தான் வருங்காலத்தில் இடைநிலைப் பள்ளி பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தை தேர்வுப் பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஓரளவு காக்க முடியும் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் கா. ஆந்திரா காந்தி தெரிவித்தார்.

மிகச் சிறிய பள்ளியாக இருந்தாலும் இவ்விழா மிக விமரிசையாக மலர்ந்தது. 8 ஆசிரியர்களின் சிறந்த ஏற்பாட்டில்  மாணவர்களின் பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் இராஜசேகரன் தெரிவித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளியின் மேலாளர் வாரியமும் துணை நின்றதில் இவ்விழா வெற்றி கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“மொழிதானே நம் முகவரி. மொழிதானே நம் அடையாளம். பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கின்ற தமிழினம், கலப்படத்தை விரும்பாத நம் சமூகம் தனது உயிரினும் மேலான தாய் மொழியிலும் கலப்படம் இல்லாமல் பேசுவதையும் எழுதுவதையும் இந்த வயதிலேயே வலியுறுத்திச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.  என அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணன் தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker