Latestஇந்தியா

திரைப் பிரபலங்களை களம் இறக்கும் கமல்! நாளை அதிரடி வேட்பாளர்கள் பட்டியல்!

சென்னை, மார்ச்.18-நாடாளுமன்ற மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இருப்பவர்களின் பெயர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் கமல் ராமாநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதை அவரது கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் வெளிவருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ, ராமாதாபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு முன்கூட்டியே போஸ்டர்கள் ஒட்டப் படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சனைகளை உட்பட பல்வேறு பிரச்சனைகள் தேடித்தேடி தீர்க்கப்பட்டு வருகின்றன.

வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்கும் என்று கமல் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று, பாரதிய ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பது.

ராமாநாதபுரத்தில் கமல் போட்டியிடுவது உறுதி. கோயம்புத்தூரில் துணைத்தலைவர் மகேந்திரன் களம் காண்பார். மற்ற தொகுதிகளில் ஸ்ரீபிரியா அநேகமாக கன்னியாகுமரியில் நிறுத்தப்படலாம்.

மேலும் பிஜேபி போட்டியிடும் தொகுதிகளில் கமீலா நாசர், சினேகன், சுகா, கு.ஞானசம்பந்தன், கோவை சரளா இவர்களில் மூவர் களம் இறங்குவர். இதற்காக அந்தக் கட்சியில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

கமல் கட்சியில் இணையாத, அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் சிலருடனும் கமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். அப்போது கமல் எவ்வளவு பெரிய அரசியல் சாணக்கியன் என்பதை தமிழக அரசியல்வாதிகள் தெரிந்து கொள்வர் என்கிறது மக்கள் நீதி மய்யம்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker