Latestசினிமா

தொலைக்காட்சி  சேனல் ஆரம்பிக்கும் சல்மான்கான்

மும்பை, மார்ச்.18- இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். அவர் சினிமாவில் நடிப்பதோடு படங்களையும் தயாரித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

சல்மான்கான் என்ற பெயருக்கு இந்தியாவில் தனி வணிகம் உண்டு. அந்த வணிகத்தை தனக்குத் சொந்தமாகவே முழுமையாக மாற்றும் முயற்சியில் சல்மான் இறங்கி இருக்கிறார்.

எஸ்.கே. டிவி என்ற பெயரில் அவர் டிவி ஒன்றை ஆரம்பிக்க விண்ணப்பம் செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை சல்மான்கான் வாங்கி வந்திருக்கிறார்.அதனால் அந்த திட்டத்தை அவர் முன்னரே யோசித்து வைத்து விட்டார் என்கிறார்கள்.

சல்மான்கான் என்பதன் சுருக்கம் தான் எஸ்கே. தன் பெயரில் டிவி ஆரம்பித்த பிறகு அவர் மற்ற தொலைக்காட்சி நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டு தன் டிவியில் மட்டுமே நிகழ்ச்சியை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker