Latestஉலகம்

நியூசி. தாக்குதல்: கொலைகாரன் ஆன்- லைனில் துப்பாக்கி வாங்கினான்!

கிரிஸ்ட்சர்ச், மார்ச். 18- நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரெண்டன் டேரண்ட் ஆன் -லைனில் இருந்து துப்பாக்கி வாங்கி இருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளி வாசல் மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ளபள்ளி வாசல் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள்  தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த  நபர் கண்மூடித்தனமாக சுட்டுக் குவித்ததில் 50 பேர் இதுவரை பலியாயினர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டேரண்ட் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் டாரண்ட் ஆன் – லைனில் ஆயுதங்களை வாங்கியதாக தெரிய வந்துள்ளது. 

நியூசிலாந்தைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனமான ” கன்-சிட்டி” இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில் கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கி சூடு  நடத்திய டேரண்ட் ஆன் லைனில் மூலம்தான் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வாங்கியுள்ளார். 

நியூசிலாந்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 50 லட்சத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். இதில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதற்கான ஆரம்ப வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker