Latestமலேசியா

பாசிர் கூடாங்: ஆற்றில் நச்சுக் கழிவைக் கொட்டியதாக 9 பேர் கைது

பாசிர் கூடாங், மார்ச் 18 –  பாசிர் கூடாங்கில் சுங்கை கிம் கிம் ஆற்றில் நச்சுக் கழிவுகளைக் கொட்டி, ஆயிரக்கணக்கானோர் சுவாசப் பிரச்னைக்கு உள்ளாகக் காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த நச்சுக் கழிவுகளில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினால் பள்ளி மானவர்கள் உள்பட  ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி, பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டால், அது விசாரணையைப் பாதிக்கும் எனப் போலீஸ் தலைவர்  டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 23ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவார்கள்.  இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 278 மற்றும் 284  ஆகியவற்றின் வழி விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker