Latestமலேசியா

பாலியல் விமர்சனம்: மருத்துவ மாணவர் கிரண் ராஜ் மன்னிப்பு கேட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 18 – மரணமடைந்த நடிகையும் பாடகியுமான எமிலி கோங் மீது பாலியல் ரீதியில் செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்ட மருத்துவ மாணவர் கிரண் ராஜ் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

விஸ்மா எம்சிஏவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பெண்களை கீழ்த்தரமாக வர்ணித்து செய்தி வெளியிட்டதைத் தவறு என உணர்ந்து அதற்காக எமிலியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அதனை இனிமேல் செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

தாம் பெண்களின் எம்லியின் நடத்தையை வர்ணிக்கும் விதத்தில் அச்செய்தியை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எமிலி கோங்கின் மரணம் சம்பந்தமாக வெளியிட்ட செய்தியில் கிரண் ராஜ் (வயது 26) கூறியிருப்பதாவது:

பெண்கள் இதன் மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டனர். ‘பப்’-லிருந்து ஆண் துணையின்றி வெளியேற வேண்டாம். நீங்கள் வீட்டுக்குச் செல்ல பாதுகாப்பு கொடுக்கும் எங்களுக்கு நீங்கள் பாலியல் சேவை வழங்க வேண்டும்.

பெண்கள் ஆண் துணையின்றி எதனையும் செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது வலைத்தளவாசிகளின் கண்டனத்துக்கு ஆளானது. 70,000 பேர் அதனைக் கண்டித்திருந்தனர்.

அவர் கல்வி பயிலும் அனைத்துலக மருத்துவ பல்கலைக்கழகம் (ஐஎம்யு) அவர் இரண்டு வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதோடு, ஒழுங்கு நடவடிகையையும் எதிர்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker