Latestமலேசியா

பாஸ் கட்சிக்கு  பணம் கொடுத்த ரமெலி எனது நண்பரே..!- அன்வார் ஒப்புதல்

கோலாலம்பூர், மார்ச். 18 – பாஸ் கட்சியின் சார்பில் ரியூகாசல் பிரெளனுக்கு பணம் கொடுத்த டத்தோ ரமெலி மூசா தமது நண்பர் என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்களவையில் பெண்டாங் பாஸ் கட்சி உறுப்பினர் அவாங் ஹாஷிம், அன்வார் ரமெலிக்கு நண்பரா? என வினவினார். அதற்கு மறுமொழி அளித்த அன்வார், ரமெலி தமது நண்பர் என்றும், பாஸ் கட்சியில் உள்ள பலரும் தமது நண்பர்களாக இருப்பவர்கள்தான் என அவர் ஒப்புக் கொண்டார். இதனை வைத்து  தாம் பாஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகப் பொருள் கொள்ளக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு அம்னோவிடமிருந்து பாஸ் ரிம. 9 கோடி பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டதை எதிர்த்து,  ஹாடி அவாங் 2017ஆம் ஆண்டு அதன் மீது வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதனை எதிர்த்து ரியூகாசல் எதிர்மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை மீட்டுக் கொள்ள பாஸ் கட்சியின் சார்பில் மலேயன் ரயில்வேயின் தலைவர் ரமெலி மூசா ரிம. 14 லட்சத்தை ரியூகாசல் பிரெளனுக்கு வழங்கிய செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker