Latestசினிமா

பீர் பாட்டிலால்  மண்டையை உடைத்த நடிகையின் காதலர்!

பெங்களூரு, மார்ச். 18- நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரபல நடிகையின் முன்னாள் காதலர் குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபட்டதால் நடிகையின் நண்பரும் ஆர்.டி.ஓ அதிகாரியுமான ஒருவருக்கு பீர் பாட்டிலால் மண்டையில் அடி விழுந்தது. 

தமிழில் ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில்”, படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடத்தில் நாயகா,கெம்பே கவுடா, வில்லன், ராகினி ஐபி எஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். 

இவர் தனது ஆண் நண்பரும் ஆர்.டி.ஓ அதிகாரியுமான ரவி ஷங்கருடன் பெங்களூர் ரெசிடன்சி சாலையில் உள்ள ரிட்ஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலில் தனியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். 

அப்போது நடிகையின் முன்னாள் காதலர் என தெரிய வருகிறது, குடிபோதையில் ராகினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஒரு கட்டத்தில் வார்த்தை முற்றியதால் ரவிஷங்கர் சண்டையை விலக்க முன் வந்தார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த சிவபிரகாஷ் அருகிலிருந்த பீர் போத்தலில் ரவிஷங்கரின் மண்டையில் அடித்தார். மண்டை பிளந்து  ரத்தம் கொட்டியது. அங்கிருந்து வெளியேறிய ரவிசங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிவப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker