Latestமலேசியா

பேராவில் ஆட்சி மாற்றமா? சுழன்றடிக்கும் பொய்ச் செய்திகளால் பரபரப்பு!

ஈப்போ, மார்ச். 18- பேராவில் ஆட்சி மாற்றம் வரப்போவதாக தொடர்ந்து வெளி வந்துக்கொண்டிருக்கும்  தகவல்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று இரவு கடைசியாக சமுக ஊடகங்களில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்சி கவிழப் போவதாக வெளியான தகவல்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்றைக்காவது அது நடக்குமா? என்று எதிர்பார்த்த எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை தந்துள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் இம்மாநிலத்தில் ஆட்சியை யார் அமைப்பது என்பது தொடர்பாக மாநில சுல்தானை சட்டமன்ற உறுப்பினர்கள்  சந்திக்க வருகை புரிந்தபோது  பதிவான  ஒரு காணொளி காட்சி மீண்டும் சுழற்சியில் விட்டு  பெரும் பரபரப்பை சிலர் ஏற்படுத்தினர்.

இம்மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணிக்கு 31 உறுப்பினர்கள், தேசிய முன்னணி வசம் 25 மற்றும் பாஸ் கட்சி வசம் 3 உறுப்பினர்கள் உள்ளனர் .

ஆட்சி மாற்றத்திற்கு தேசிய முன்னணிக்கு மேலும் இருவரின் ஆதரவு தேவை . அவர்கள்  யாராவது ஆதரவு வழங்க வருவார்களா? எனும் கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாநில அரசாங்க  செயலகத்தில் கெஅடிலான் கட்சியைச் நான்கு சட்டமன்ற  உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர்கள் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கூட்டத்திற்கு மாநில கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டான் காய் இங் தலைமை தாங்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker