Latestஉலகம்

மைக்கேல் ஜேக்சன் மகள், தற்கொலைக்கு முயற்சியா?

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச.18- ‘பாப்’ பாடல் உலகின் மன்னனான மைக்கேல் ஜேக்சன் மகள் பாரிஸ் ஜேக்சன், தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பாடகர் மைக்கேல்ஜேக்சன், கடந்த 2009 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜேக்சன் (வயது 20) என்ற மகளும் ஜோசப் ஜேக்சன் மற்றும் பிரின்ஸ் ஜேக்சன் என இரு மகன்களும் உள்ளனர்.

மாடல் அழகியான பாரிஸ் ஜேக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சனை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

“லீவிங் நெவர்லேண்ட்” என்கிற ஆவணப் படத்தில் மைக்கேல் ஜேக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டிப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜேக்சன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர், தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி உள்நோக்கம் கொண்ட வதந்தி என்று பாரிஸ் ஜேக்சனுக்கு வேண்டிய நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker