Latestமலேசியா

வழக்குகளைத் தாமதப்படுத்த நஜிப் கையாளும் தந்திரங்கள்!   – டோம்மி

புத்ரா ஜெயா, மார்ச் 18 –  எஸ்ஆர்சியின் ரிம. 42 மில்லியன் சம்பந்தப்பட்ட வழக்கை தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கையாண்டு வருவதாக சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸ் தெரிவித்தார்.

அந்த வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதி மன்றத்துக்கு மாற்ற சான்றிதழை மீட்டுக் கொண்டது சட்டப்படியே நடந்ததாகவும், அதற்கு இரு சாராரும் உடன்பட்டதாக டோம்மி தோமஸ் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 417(2) இன் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதி அதனை மாற்ற சட்டம் அனுமதிப்பதாகவும், அதனை சம்பந்தப்பட்டோரின் கோரிக்கைக்கு இணங்கத்தான் செய்ய வேண்டுமென்பது இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதனை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து முறையீட்டு நீதிமன்றத்துக்கு மாற்றியது சட்டத்துக்கு முரணானது என நஜீப்பின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். அதனை தீர்மானம் ஒன்றின் மூலம்தான் செய்ய வேண்டுமென அவர்கள் வாதிட்டனர்.

முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸபாரியா முகமட் யூசோப்,  நீதிபதிகள் டத்தோ லாவ் பீ லான் மற்றும் டத்தோ ரோட்ஸாரியா பூஜாங் அடங்கிய அமர்வு அதன் தீர்ப்பை மார்ச் 21இல் அறிவிக்கும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker