Latestமலேசியா

பிற மத வழிபாட்டுத் தளங்களின் மீது பாதுகாப்பு விழிப்பு நிலை- – ஐஜிபி

கோலாலம்பூர், மார்ச் 19 – நியூசிலாந்து கிரிஸ்சர்ச் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, எதிர்வினை நடவடிக்கைகளைத் தவிர்க்க மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தளங்களின் மீது முழு கண்காணிப்பை போலீசார் மேற்கொள்வர்.

அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னர், தாம் தேவாலயங்கள், மற்றும் ஆலயங்களின் மீது முழுக் கணகாணிப்பை வலுப்படுத்த அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதாகப் போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மலேசிய போலீஸ் கூட்டுறவுக் கழகம் சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டபோது, அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker