Latestமலேசியா

சித்தியவானில் பெட்ரோல் ஊற்றி எரியூட்டிக் கொண்ட இளைஞர் மரணம்!

சித்தியவான், மார்ச். 20- காதலியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தன் உடலில் பெட்ரோலை ஊற்றி எரியூட்டிக் கொண்டதாக நம்பப்படும் 21 வயதுடைய இந்திய இளைஞர், சிகிச்சைக்கு பலனின்றி மஞ்சோங் மருத்துவமனையில் உயிர்நீத்தார்.

சித்தியவானிலுள்ள, கம்போங் பிந்தாங் சித்தியவான் என்ற இடத்தில் காதலியுடனான சர்ச்சையின் போது அவர் தனக்கு தானே எரியூட்டிக் கொண்டதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முகம்மட் ஹனிப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

உடலில் தீப் பரவியதால் அந்த இளைஞர் 90 விழுக்காடு கடும் தீக் காயங்களுக்கு உள்ளாகி மஞ்சோங் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.30 மணியளவில் அவர் உயிர்நீத்ததாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்

எரியூட்டிக் கொண்ட இந்தச் சம்பவம்,  நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சம்பந்தப்பட்ட வீட்டின் கார் நிறுத்தும் முற்றத்தில் நடந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker