Latestமலேசியா

மரண தண்டனையிலிருந்து மலேசியரைக் காப்பாற்ற நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 20 – சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சரவாக்கை சேர்ந்த நபரைக்  காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

சரவாக்கைச் சேர்ந்த மைக்கல்,  சாங்கி சிறையில் நாளை மறு நாள் தூக்கிலிடப்பட இருக்கிறார். 2015ஆம் ஆண்டு மைக்கல் இன்னொரு சரவாக்கியரான டோனி இம்பாவுடன் சேர்ந்தது சிங்கப்பூரில் நடத்திய திருட்டுச் சம்பவத்தில், ஒருவர் கொல்லப்பட்டு  மூவர் காயமடைந்தனர்.

மலேசியாவில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவது போல,  சிங்கப்பூரிலும் மேற்கொள்ளப் படுவதை தாம் ஆதரிப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker