Latestமலேசியா

வாகன மோதல்: அக்காள் மடியில் இருந்த குழந்தை விபத்தில் பலி!

கோத்தா கினபாலு, மார்ச் 20 – லஹாட் டத்து- சண்டாக்கான் சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 19 மாத குழந்தை பலியானது.

நேற்று மாலை 4 மணியளவில் லாஹாட் டத்துவிற்கு 15 கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் லோரி ஆகியவை விபத்தில் சிக்கின.

நான்கு சக்கர வாகனத்தை தந்தை ஓட்டிய நிலையில், குழந்தை பக்கத்தில் அமர்ந்திருந்த அக்காளின் மடியில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது.

மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்த வேளையில், சண்டாக்கானிலிருந்து லாஹாட் டத்துவை நோக்கி வந்து கொண்டிருந்த லோரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நான்கு சக்கர வாகனத்தை மோதியது.

அந்த வாகனம் சுழன்று எதிரே வந்து கொண்டிருந்த பேருந்தை மோதியதில், குழந்தை பரிதாபமாக மாண்டது. தந்தை, மகள், பேருந்துப் பயணிகள்  12 பேர், ஓட்டுநர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக லஹாட் டத்து போலீஸ் துணை ஆணையர் ஏசிபி நஸ்ரி மன்சோர் தெரிவித்ததார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker