Latestமலேசியா

கட்டுபாட்டை இழந்த வேன் மின் கம்பத்தில் மோதியது; முதியவர் மரணம் !

கோலகங்சார், மார்ச் 21- வேன் ஒன்று மின் கம்பத்தில் மோதிய விபத்தில் 62 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்

இந்தச் சம்பவம் இன்று காலை 7.25 மணியளவில் ஈப்போ-தைப்பிங் சாலையின் 49.5ஆவது கிலோ மீட்டரில் நேர்ந்துள்ளது.

மானோங், கம்போங் லெம்போர் பெக்கான் எனும் இடத்தைச் சேர்ந்த முகமட் தைப் சாலே(வயது 62) சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

முதியவர் ஓட்டிவந்த வேன் வளைவு ஒன்றில் கட்டுபாட்டை இழந்து மின் கம்பத்தை மோதி, விபத்து ஏற்பட்டிருப்பதாக கோலகங்சார் போலீஸ் துணை ஆணையர் ரஸாலி இப்ராஹிம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker