Latestமலேசியா

தீயணைப்பு வீரர் அடிப்பின் காயங்கள், தாக்குதலால் ஏற்பட்டதல்ல! -டாக்டர் சாட்சியம்

ஷா ஆலம், மார்ச்.22- தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிம் மீதான காயங்கள், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏற்பட்டதல்ல, மாறாக வாகன மோதலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்பதை அவரது பிரேதப் பரிசோதனை சுட்டிக் காட்டுவதாக தடயவியல் நிபுணர் ஒருவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அதிகாலையில் நடந்த சம்பவத்தில் முகம்மட் அடிப் தாக்கப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரியவில்லை என்று மரண விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் டாக்டர் அகமட் ஹஃபிஷாம் ஹஸ்மி தெரிவித்தார்.

இந்த விசாரணையில் இவர் 24ஆவது சாட்சி ஆவார். இவர்தான் பிரேத பரிசோதனையை நடத்திய தடயவியல் நிபுணராவார்.

24 வயதுடைய அந்தத் தீயணைப்பு வீரர், கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் அந்தக் காயங்கள் இல்லை. அவரது நெஞ்சுக்குள் இருந்த காயங்களின் வகையைப் பார்த்தால் அடித்து, உதைத்தற்கான சம்பவத்துக்கு முரணாக இருக்கிறது என்று டாக்டர் ஹஃப்ஷாம் தெரிவித்தார்.

இதற்கு அப்பால்றவர் தாக்கப்பட்டதில், அல்லது தற்காத்துக் கொண்டதினால் ஏற்பட்ட காயங்களுக்கு பொருந்தி வரக் கூடிய வகையில் வேறு காயங்கள் எதுவும் அவருடைய முகத்தில், தலையில், அடி வயிற்றில், மேல் மற்றும் கீழ் கை எலும்புகளில் இல்லை என்று பிரேத பரிசோதனையில் தெரிந்தது என்று அவர் சொன்னார்.

அந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களை ஒன்று படுத்தியும் பிரேத பரிசோதனை அடிப்படையிலும் பார்க்கும் போது EMRS தீயணைப்பு அவசர மருத்துவச் சேவை வேனின் கதவுச் சட்டம் மோதியது மற்றும் கீழே விழுந்ததால் சாலை திண்டில் கடுமையாக மோதிக் கொண்டது ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தினால் பெரும்பாலும் அவருக்கு அந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றார் அவர்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker