Latestஉலகம்

200 பேருடன் ஆற்றில் குப்புறக் கவிழ்ந்தது படகு: 94 பேர் பலி! -(Video)

மொசூல், மார்ச். 22- ஈராக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 94 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் நேற்றைய தினம் குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஈராக்கில் இந்த பண்டிகை வருஷப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மொசூல் நகரில் இருந்து டைகிரிஸ் நதியில் 200 பேர் படகில் பயணித்துள்ளனர். 80 பேர் வரை மட்டுமே சராசரியாக செல்லக்கூடிய அந்தப் படகில் 200 பேர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் படகில் திடீரென தொழில்நுடப கோளாறு ஏற்பட்டதால் அப்படியே தலைகீழாக படகு நதியில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மக்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். தலைகீழாக படகு கவிழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டனர்.

இவ்விபத்தில் 94 பேர் பரிதாபமாக பலியாகினர் மீதம் உள்ளவர்களில் 54 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை எனினும் மீட்பு பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker