Latestமலேசியா

MRSM கல்லூரிகளில் இந்திய மாணவர்களை சேர்ப்பதில் மேலும் தீவிர முயற்சி! -சிவராசா

கோலாலம்பூர், மார்ச், 22- மாரா இள நிலை அறிவியல் கல்லூரிகளில் (MRSM) இந்திய மாணவர்களின் தொடக்கப் பதிவு மிகுந்த உற்சாகத்தை தந்தாலும் இறுதியில் கல்லூரிகளில் சேர்ந்து  படிப்பை தொடங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்தது வருத்தத்தை அளித்துள்ளது என்று புறநகர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் சிவராசா தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் பல்வேறு தீவிர முயற்சிகளுக்கு பின்னர் பூமிபுத்ரா கல்லூரி மாணவர்களுக்கு எம்.ஆர்.எஸ்.எம் கல்லூரிகளில் 10 விழுக்காடு இடம் பெறுவது சாத்தியமானது.

இதற்கான விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டதால் 2019 இல் 2,670 மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைத்தன என்றார் அவர்.

படிவம்-1 மற்றும் படிவம்-4 ஐ சேர்ந்த இந்த மாணவர்களில் 847 பேருக்கு கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும் இறுதியில் 377 இந்திய மாணவர்கள் மட்டுமே வாய்ப்பை பயன்படுத்தி கல்லூரிகளில் இணைந்தனர்.

எஞ்சிய 470 மாணவர்கள் கிடைத்த அந்த வாய்ப்பை ஏற்கவில்லை  என்று இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் துணையமைச்சர் சிவராசா சொன்னார்.

கிட்டத்தட்ட 470 மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த இடங்களை ஏற்காமல் விட்டுவிட்டனர். இது ஏன்? என்பது பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பாக இந்திய சமுதாயத்தில் கூடுதலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

தரமான அறிவியல் கல்வி, தங்கிப் படிக்கும் வசதி, உணவு வசதிகள் என அனைத்தும் இலவசம். மாதம் 60 ரிங்கிட் மட்டுமே மாணவர் கட்டணம். எனினும் அதனையும் செலுத்த முடியாத பி.40- குடும்பங்களாக இருந்தால் அதுவும் இலவசமாக்கப் படுகிறது என அவர் விளக்கினார்.

நாடு தழுவிய அளவில் 54 கல்லூரிகளில் பல்வேறு வகைக் கல்விகள் வழங்கப் படுகின்றன. சில பெற்றோர்கள் பிள்ளைகளை பிரிய முடியவில்லை என கூறுகிறார்கள். சிலர், மாநிலம் விட்டு மாநிலம் செல்வது எப்படி என்று கேட்கிறார்கள்.

வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு வகை கல்வி பயிற்சிகள் என்பதால், அவர்கள் விரும்பும் கல்வி கிடைக்க வேறு வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாதது தான் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker