Latestமலேசியா

அஸ்லான் ஷா ஹாக்கி; ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!

ஈப்போ, மார்ச். 23- இங்கு இன்று தொடங்கிய சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் இந்தியா தொடக்க ஆட்டத்தில் வெற்றிப் பெற்றது.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற தொடக்க ஆட்டம் ஜப்பானுடன் மோதிய இந்தியா, அதில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

இந்தியா ஆட்டக்காரர் வருண் குமார் 25ஆவது நிமிடத்தில் பெனால்டிப் கோர்னர் வழி முதல் கோலை அடித்தார். அடுத்து 55 ஆவது நிமிடத்தில் சிம்ராட்ஜிட் சிங் மற்றொரு கோலை அடித்தார்

இன்று தொடங்கி இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும்
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டி 28ஆவது ஆண்டாக இங்கு இடம்பெறுகிறது. இதில் மலேசியா, தென், கொரியா, ஹாலந்து, ஜப்பான், கனடா, இந்தியா ஆகிய 6 நாடுகளின் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தப் போட்டியில் வழக்கமாக பங்கேற்று வந்த ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்காததால் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் இறுதியாட்டம் வரை தாக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவிடம் கனடா தோல்வி

ஈப்போவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா கனடாவை தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தில தென் கொரியா 3 கோல்களை அடித்து அதிர வைத்தது. அடுத்த மறுபாதி ஆட்டத்தில் அது மேலும் மூன்று கோல்களை அடித்து 6-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

எனினும், விடாமுயற்சியுடன் கடுமையாகப் போராடிய கனடா, தொடர்ந்து மூன்று கோல்களை அடித்தது. இறுதியில்  ஆட்டம் 6-3 என்ற கோல்கணக்கில் தென் கொரியா வெற்றியை நிலைநிறுத்தியது.

இதனிடையே நாளை நடைபெறவிருக்கும் ஆட்டங்களில் . தென் கொரியக் குழு இந்தியாவுடனும் , கனடா குழு போலந்துடனும் மோதவிருக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker