Latestமலேசியா

நஜிப் ஆதரவாளர்களின் அராஜகம்! கல்வியாளர் கழகம் கண்டனம்!

கோலாலம்பூர், மார்ச். 23- தங்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக திரண்ட மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் அறுவரை, முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவத்தை மலேசிய கல்வியாளர்கள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.

தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையைத்தான் அந்த மாணவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். எனவே, அவர்களை சீனமூட்டுவதிலோ அல்லது அவர்களைத் தாக்குவதிலோ நஜிப் ஆதரவாளர்கள் ஈடுபட்டது அவசிமற்றது என்று அந்த இயக்கம் தெரிவித்தது.

மேலும் நஜிப் மீதான தங்களின் குறைபாட்டை தெரிவிக்கும் மாணவர்களின் உரிமையை, மலாய் சமுகத்தையே அவமானப்படுத்தி விட்டதைப் போல சித்தரிக்க முயலும் போக்கையும் அந்த இயக்கம் கண்டித்துள்ளது.

அந்த மலாயா பல்கலைக் கழக மாணவர்கள், நஜிப்பை குறைகூறிய அம்சத்தை மலாய் சமுதாயத்தை அவமதித்து விட்டது போல காட்டி நஜிப்பின் ஆதரவாளர்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் முற்றிலுமான இனவாத அராஜக பாணியில் செயல் பட்டுவதாக மலேசிய கல்வியாளர்கள் கழகம் சாடியது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker