Latestமலேசியா

பினாங்கில் ஜோ லோ ஆடம்பர பங்களாவை அரசு கைப்பற்றியது!

பினாங்கு, மார்ச். 23- மலேசியாவினால் தேடப்படும் தொழிலதிபரான ஜோ லோவ் என்ற லோவ் டெக் ஜோவின் குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பர பங்களாவை மலேசிய அதிகாரிகள் கைப்பற்றினர்.

1எம்டிபி நிதிமுறைகேடு தொடர்பான தங்களின் விசாரணைக்கு உதவும் பொருட்டு அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.

பினாங்கு தஞ்சோங் பூங்காவில் ‘எல் நிட்ஸ்ஜோ’ என்ற பெயரில் அமைந்திருக்கும் இந்த மூன்று மாடி பங்களாவின் முன்புறச் சுவரில் இதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டின் நிதிமுறைகேடு, பயங்கரவாத தடுப்பு சட்டவிரோத நிதி ஆதாரச் சட்டத்தின் 51(1) ஆவது பிரிவின் கீழ் இந்த பங்களாவை அரசாங்கம் கைப்பற்றி இருப்பதை அறிவிக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker