Latestவிளையாட்டு

அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவை தடுத்து நிறுத்தியது தென் கொரியா!

ஈப்போ, மார்ச். 24- இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் 28ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் தென் கொரியாவுடன் இந்தியா 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலைக் கண்டது.

இந்தப் போட்டியில் இந்திய ஆட்டக்காரர் மண்டிப் சிங் 28 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது ஆட்டம் முடிய 8 நிமிடம் இருந்த சமயம் பெய்த கடும் மழையினால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சுமார் 45 நிமிடத்திற்குப் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் முடிய 30 வினாடிகள் இருந்தபோது தென் கொரியா பெனால்டி கோர்னர் வழி ஒரு கோலை அடித்து 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டத்தை சமப்படுத்தியது.

தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இந்தியா வெற்றிக்கண்டது. தென்கொரியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 6-3 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

நாளை மறுநாள் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மலேசியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இரு குழுக்களுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகும். தொடக்க ஆட்டத்தில் மலேசியா 5-1 இல் போலந்தை வீழ்த்தியுள்ளது.

நாளை மறுநாள் நடக்கும் ஆட்டத்தில் மலேசியா வெல்லுமானால், அது அஸ்லான் கிண்ணத்தை வெல்வதற்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள முடியும்.

அதே வேளையில் ஓர் ஆட்டத்தில் வென்று, ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டிருக்கும் இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிய நிலையில் உள்ளது. அடுத்து ஒரு தோல்வியோ அல்லது சமநிலையோ ஏற்படுமானால் அஸ்லான் கிண்ணத்தை கைப்பற்றும் இந்தியாவின் கனவு சிதைந்து விடும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker