Latestமலேசியா

ஆபாசப் படம் பார்க்கும் மலேசிய சிறார்: வான் அஸீசா சரமாரி கேள்வி

செர்டாங், மார்ச். 24- சுமார் 10 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மலேசிய சிறார்களில் 80 விழுக்காட்டினர் தெரிந்தே ஆபாசப் படங்களை பார்க்கின்றனர் என்று ஆய்வு ஒன்று வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சித் தகவல் குறித்து துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸீசா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆபாசப் படங்களை எதிர்க்கும் மலேசியர்கள் (எம்.ஏ.பி.) என்ற அரசு சரா அமைப்பு ஒன்று, 2018-இல் நடத்திய ஆய்வின் தகவல் இதுவென்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆய்வை, சம்பந்தப்பட்ட அந்த அமைப்பு எத்தகைய வழிமுறையைக் கொண்டு நடத்தியது என்பதை அது தெளிவு படுத்த வேண்டும் என்று வான் அஸீசா வலியுறுத்தி உள்ளார்.

ஒரு வகையில் இந்த ஆய்வின் முடிவு ஒட்டுமொத்தமாக கவலை அளிப்பதாக இருக்கிறது. அதே வேளையில் எத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு விரிவாக விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறை, எத்தகைய முறையில் முன்மாதிரிகள் திரட்டப்பட்டன, எப்படி அத்தகைய இறுதி முடிவுக்கு அந்த அமைப்பு வந்தது, எப்படி இதன் முடிவுகள் தொகுக்கப்பட்டன என்பது பற்றியெல்லாம் விளக்க வேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அஸீசா கேட்டுக் கொண்டார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker