Latestமலேசியா

உலக நீர் தினம்: புந்தோங் டுவா- தீகா ஆர்.டி. முதல் பரிசை வென்றது!

அலோர்ஸ்டார், மார்ச், 24- கெடாவில் தேசிய நிலையில் நடத்தப்பட்ட உலக நீர் தின விழா 2019 இல் பேராவிலுள்ள புந்தோங் டுவா மற்றும் புந்தோங் தீகா ருக்குன் தெத்தாங்கா(ஆர்டி), 30 ஆயிரம் ரிங்கிட் முதல் பரிசுத் தொகையை வென்றது.

உலக நீர் தினத்தை முன்னிட்டு கெடாவில் உள்ள பந்தாய் மெர்டெக்கா, குவால மூடாவில் தேசிய நிலையிலான நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் மற்றும் குடிநீர் , இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்டாகியோர் சிறப்புப் பிரமுகர்களாக கலந்துகொண்டனர் .

இந்த நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் பயன்பாடுகள் மீதான செயல் திட்டத்தை மேல் குறிப்பிட்ட ஆர்டி இயக்கம் தாக்கல் செய்தது.

இந்த இயக்கம் தாக்கல் செய்த அதன் செயல்பாடுகள் நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்து முதல் பரிசை தட்டிச் செல்ல வழி வகுத்தது. இவ்வேளையில் அதன் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் அந்த இயக்கத்தின் தலைவர் எஸ். ஜெயகோபி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker