Latestமலேசியா

உச்சக் கட்டத்தில் டிங்கி அபாயம்! – அமைச்சர் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 25 –  நாட்டில் கோடைக் காலம் நிலவுவதால், ஏடீஸ் கொசுக்களின் உற்பத்திப் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரிலிருந்து இவ்வாண்டு மார்ச் 23 வரையில் மட்டும் மொத்தம் 34,222 பேர் இந்த டிங்கி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சை, ஒவ்வொரு வாரமும் இந்நோயினால் 2,800 பேர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டின் ஜனவரி 1லிருந்து மார்ச் 23 வரை டிங்கி நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 23,208ஆக இருந்தது.   

இதில் சிலாங்கூரில் 20,002 பேர்களும், ஜொகூரில் 2,788 பேர்களும், கோலாலம்பூரில் 2,745 பேர் மற்றும் சபாவில் 1,560 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 2018ஆம் ஆண்டில் டிங்கி நோயினால் 31 மரணங்கள் நிகழ்ந்துள்ள வேளையில், இவ்வாண்டு மரண எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.

எனவே, டிங்கி நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென லீ கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker