Latestமலேசியா

ஏஐஏசி முன்னாள் இயக்குநர் சுந்தர ராஜுவின் மீது நிதி முறைகேடு வழக்கு

கோலாலம்பூர், மார்ச் 26 – ஆசிய அனைத்துலக சமரச மையத்தின்(ஏஐஏசி) முன்னாள் இயக்குநர் என்.சுந்தர ராஜுவின் மீது ரிம.11 லட்சம் மதிப்புள்ள 3 நிதிக் கையாடல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.

63 வயதான சுந்தர ராஜு, மையத்தின் ரிம. 89,700, மற்றும் ரிம. 621,172.50, மூன்றாவதாக ரிம. 300,495ஐ கையாடல் செய்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

அந்தக் குற்றங்களை அவர் தலைநகர் ஜாலான் சுல்தானில் உள்ள ஏஐஏசி கட்டடத்தில் கடந்தாண்டு ஆகஸ்டு 17இல் இருந்து டிசம்பர் 8 வரை புரிந்ததாகக் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டம், பிரிவு 409இன் கீழ் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 20 ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

நீதிபதி அசுரா அல்வி அவரை ரிம. 100,000 பிணையில் விடுவித்ததோடு, அவரின் கடப்பிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். வழக்கு மே 3-இல் செவிமெடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker