Latestஇந்தியா

ஏழைகளின் காவலரா மோடி? கமல் கேள்வி

சென்னை, மார்ச்.26- நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என அறிவித்த கமல்ஹாசன் கோவையில் நடந்த கூட்டத்தில் பிர்தமர் மோடி ஏழைகளின் காவலரே அல்ல என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா கோவையில்  பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் 40 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதன் பிறகு பேசிய கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் போராட்டம் எனத் துவங்கி தூத்துக்குடி துப்பாக்கி சூடு வரையிலான பல சம்பவங்களை கூறி ஆளும் பாஜக, அதிமுக, திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காவலாளி எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என்றும் கமல் குற்றம் சாட்டினார்.

தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய அவர், பல்லக்கில் ஏறி அமர்வதை விட அதை தூக்கி சுமக்கவே ஆசை எனத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker