Latestஉலகம்

குடும்பச் சண்டை: மனைவி இருந்த கட்டடத்தை விமானத்தில் மோதிய கணவர்

பெய்சோன், மார்ச், 26-  ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டிலுள்ள பெய்சோன் என்ற இடத்தில் விமானி ஒருவர் தனது நிறைமாத மனைவிக்கு சடங்குப் பூர்வ விழா நடந்த கொண்டிருந்த  கட்டடத்தின் மீது  சிறிய ரக விமானத்தை மோத விட்டு உயிரிழந்தார்.

சார்ல் வில்ஜோன் என்பவர் கலஹாரி ஏர் சர்வீஸில் என்ற நிறுவனத்தில் விமானியாக இருந்தார். இவரது மனைவி நடாசா நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு சிறப்பு நிகழ்ச்சி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ நடந்தது.

அப்போது அழையா விருந்தாளியாக நடாசாவின் கணவர் அந்நிகழ்வுக்கு வந்துள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை  காரணமாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு நிகழ்ச்சியின் போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது ஆத்திரம் அடைந்த கணவர் சார்ல் வில்ஜோன், அங்கிருந்து சென்ற பின்னர்  தனது  விமானத்தை வேண்டுமென்றே  தாழ்வாக பறக்கவைத்து நிகழ்ச்சி நடந்த கிளப் கட்டடம் மீது மோதி வெடிக்க செய்துள்ளார் சார்ல். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலர்காயமடைந்தனர். இது ஒரு திட்டமிட்ட சம்பவம் என இதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker