Latestசினிமா

‘நீங்களும் ஒரு தாயின் வயிற்றில் தானே பிறந்தீர்கள்? -ராதாரவிக்கு நயன்தாரா பதிலடி

சென்னை, மார்ச்.26- தன்னைப் பற்றிய நடிகர் ராதாரவியின் சர்ச்சைக்குரிய  பேச்சுக்கு பதில் கூறியிருக்கும் நடிகை நயன்தாரா, ‘நீங்களும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்தீர்கள்’ என்பதை மறந்து விடவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

நயந்தாரா பற்றிய ராதாரவியின்  பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஷால், , வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கழகக் கட்டுபாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்று வெளியிட்டார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தார் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர், மற்ற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக வழிகாட்டுபவராக திகழ வேண்டும்.

திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

கடைசியாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடிகர் சங்கத்தில் விசாகா வழிகாட்டு முறையின் அடிப்படையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது பணிவான கேள்வி. எனக்கு துணையாக நின்ற- நிற்கும் அனைவருக்கும் நன்றி. – இவ்வாறு நயன்தாரா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker