Latestவாழ்க்கை

நீரிழிவு நோய் – ஆசியாவிலேயே மலேசியாவில் தான் அதிகம்!

கோலாலம்பூர், மார்ச். 26 – நாட்டில் தற்போது 3.6 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு வாக்கில் 7 மில்லியனாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

அதாவது 2025 ஆம் ஆண்டு வாக்கில் 18 வயதுக்கும் அதிகமானோரில் 31.3 விழுக்காட்டினர் அந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என சுகாதார அமைச்சர் ‌ஷுல்கிப்பி அகமட் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ்- ஆக்ஸ்போர்டு, சன்வே பயோ மெடிக்கல் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், அந்த நிலை ஏற்படுமானால் அது ஆசியாவிலேயே  மலேசியா முதல் இடத்தில் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்நோய்க்கு அரசு அதிமுக்கியத்துவம் கொடுப்பதால் அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நோயினால் குடும்பத்தின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, குடும்ப வருமானம் குறைந்து, இயலாமை, காலம் வரும் முன்னரே இறப்பு, இயலாதவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவை கூடுகின்றன.

2011ஆம் ஆண்டு அரசு அந்நோய்க்கு செலவிடப்பட்ட தொகை ரிம. 200 கோடி என்றும் அது இவ்வாண்டு ரிம. 352 கோடியாக அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker