Latestமலேசியா

பழனியில் விபத்து : தாய் – 2 மகன்களின் உடல்கள் நாளை அதிகாலை மலேசியா வந்தடையும் !

கோலாலம்பூர், மார்ச்.26- பழனிக்கு அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த கிள்ளானைச் சேர்ந்த குடும்ப மாது ஈஸ்வரி ரவி (வயது 40) மற்றும் அவருடைய இரு மகன்களான சஞ்சாய் (வயது 15) தேவானந்தன் (வயது 11) ஆகியோரின் நல்லுடல்கள் நாளை அதிகாலை கோலாலம்பூர் வந்து சேர்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் நடந்த விபத்தில் இவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

தந்தை சின்னக்கண்ணனை தூதரக அதிகாரி சரவணன் சென்னையில் சந்தித்து ஆறுதல் கூறிய போது….

மேலும் ஈஸ்வரியின் இதர மூன்று பிள்ளைகளான தேவேந்திரன் (வயது 11) சங்கவி (வயது 7) மற்றும் வன்சிகா (வயது 5) ஆகியோர் காயமின்றி தப்பினர்.

விபத்தில் இறந்த மூவரின் உடல்கள் நாளை அதிகாலை 5.30 மணியளவில் மாஸ் விமானம் மூலம் கோலாலம்பூர்  வந்து சேரும்.

மனைவி மற்றும் பிள்ளைகளை விபத்தில் பறிகொடுத்த ஒரு வர்த்தகரான சின்னக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் விரைந்தார். அவர்களின் உடல்களை மலேசியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முடித்துக் கொண்டு மெலிண்டா விமானம் மூலம் நாளை அதிகாலை  அவர் கோலாலம்பூர் வந்து சேர்கிறார்.

ஈஸ்வரி, சஞ்சாய், தேவானந்தன் ஆகிய மூவரின் இறுதிச் சடங்குகள் நாளை 27ஆம் தேதி மதியம் 1 மணியிலிருந்து முதல் 4 மணிக்குள் NO 64,  JALAN TEMENGGUNG  39F/ KS 7, TAMAN SEJAHTERA,41200 KLANG என்ற முகவரியிலுள்ள இல்லத்தில் நடைபெறும்.

பின்னர் ஷா ஆலாமிலுள்ள நிர்வாணா மெமோரியல் பார்க் தகன மையத்தில் தகனம் செய்யப்படும். தொடர்புக்கு ரமேஷ் 019- 333 5916 மற்றும் குணா 016-377 4237.

இதனிடையே இவர்கள் மூவரின் உடல்களையும் மீண்டும் மலேசியாவுக்கு கொண்டு வருவதில் சென்னையிலுள்ள மலேசியத் துணை தூதரக அலுவலகம் முக்கிய ஏற்பாடுகளை செய்தது என்பதோடு, தனது மனைவி பிள்ளைகளை இழந்து துயரில் இருந்த தந்தை சின்னக்கண்ணனை நேரில் சந்தித்து தூதரக அதிகாரியான சரவணன் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker