Latestமலேசியா

மகாதீர் பற்றிய நூருலின் விமர்சனம்: அவரது சொந்தக் கருத்து- அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமர் துன் மகாதீரை தமது புதல்வி நூருல் இஸ்ஸா விமர்சித்தது அவரின் சொந்தக் கருத்து. அது கட்சியின் கருத் து அல்ல என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நூருலில் விமர்சனம் முழுக்க முழுக்க மகாதீரைக் குறிவைத்ததாக இல்லை. பக்காத்தான் மகாதீருக்கு முழு ஆதரவைத் தெரிவித்திருந்தாலும், அவரை விமர்சிக்கவும் குறை கூறவும் உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது முந்தைய அம்னோ அரசின் செயல்போல இருப்பதாகக் சிலர் குறைகூறுவதாகவும், மகாதீருக்கு பிரதமராகும் வாய்ப்பை வழங்கியதே தமது குடும்பம்தான். அவருக்கு தாங்கள் முழு ஆதரவையும் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குழப்பம் மிகுந்த சூழ்நிலையில் தாம் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தமது குடும்பத்துக்கு மகாதீர் அளித்த கொடுமையை மனதில் வைத்து அவருடன் வேலை செய்வது மிகவும் கடினம் என சிங்கப்பூர் சண்டே டைம்சுக்கு நூருல் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் மகாதீர், தமது தந்தை அன்வாரை ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிறைக்கு அனுப்பியதை அவர் நினைவில் வைத்து, அதனைக் கூறியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

நூருல் கூறிய கருத்தின் உள்ளம்சத்தை தாம் உணர்வதாகவும் அது பற்றி இனி மேலும் விவாதிக்கத் தேவையில்லை என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker