Latestமலேசியா

மகாதீர் விமானத்திற்கு அனுமதி மறுப்பா? -அது பொய் என்கிறது இந்தியா!

புதுடில்லி, மார்ச். 26- அண்மையில் மலேசியா பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மட் பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்ட போது அவருடைய விமானம் இந்தியாவின் விண்பரப்பில் பறப்பதற்கு இந்தியா தடுத்து விட்டதாக வெளிவந்த தகவல் ஒரு பொய்யான தகவல் என்று இந்திய ஊடகங்களின் செய்திகள் கூறுகின்றன.

இந்தச் செய்தி பொய்யானது என்பதோடு உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட செய்தி என்று இந்திய அரசு தரப்பை மேற்கோள் காட்டி இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

மேலும் உண்மைநிலை என்னவென்றால், இந்தியாவுக்கு மேலே பறந்து வரும் விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்க முடியாது என்று தடை வித்திருப்பது பாகிஸ்தான் தான் என்று செய்திகள் குறிப்பிட்டன.

பிரதமர் துன் மகாதீரின் விமானம், இந்திய விண்பரப்பில் பறந்து செல்ல பொது விமானப் போக்குவரத்து இயக்குரகம் அனுமதி அளித்துள்ள போதிலும், அவருடைய விமானம் மிகத் தொலைவான சுற்றுப்பாதையில் செல்ல நேர்ந்ததற்கு, பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தனது தேசிய தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பிரதமர் துன் மகாதீருக்கே பாகிஸ்தான் விதிவிலக்கு அளிக்காமல் போன விசித்திரத்தால் தான், அவர் மிகத் தொலைவான தூரம் பறந்து சுற்றிக் கொண்டு பாகிஸ்தான் சென்றடைய நேர்ந்தது.

அனைத்துலக விமானச் சேவை விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களும் இந்திய விண்பரப்பில் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்திருக்கிறதே, தவிர அத்தகைய கட்டுப்பாடு எதனையும் இந்தியா விதிக்கவில்லை என்று இந்தியத் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker