Latestமலேசியா

மாணவி பாலியல் கொலை; ஆசாமிக்கு மரண தண்டனை!

ஜோர்ஜ் டவுன், மார்ச். 26- மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அவரைக் கொலை செய்த பாதுகாவலருக்கு பினாங்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பெர்மாத்தாங் டாமார் லாவுட், தெலுக் கும்பார் எனும் இடத்தில் உள்ள பண்டார் பாரு பெர்டா அடுக்குமாடி வீட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

காலை 7.30க்கும் இரவு 7.30க்கும் இடையே 17 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த பின்னர் அவரைக் கொலை செய்ததாக தர்மிஸி யாக்கோப் (வயது 23) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தற்காப்புத் தரப்பு இந்த வழக்கில் தகுந்த சந்தேகத்தை எழுப்பத் தவறியதால், நீதித்துறை ஆணையர் அப்துல் வஹாப் முகமட், வல்லுறவுக்கு 15 ஆண்டு சிறையும், 3 பிரம்படியையும் விதித்தார். பின்னர் கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker