Latestமலேசியா

லண்டன் ஏரியில் மலேசிய மாணவரின் உடல்!

கோலாலம்பூர், மார்ச். 26- லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயிலும் மலேசிய மாணவரின் உடல் செர்பென்டைனில், ஹைட் பார்க்கில் ஏரியில் நேற்று மீட்கப்பட்டது.

மாணவர் அட்டையின்படி அவர் 24 வயது முகமட் ஹாஃபிஸ் என அடையாளம் காணப்பட்டது. அவர் மலாய் மெயிலின் இணை ஆசிரியர் ஸைனால் எப்பியின் புதல்வராவார்.

நேற்று காலை 5.51 மணியளவில் சடலம் மிதப்பதாக உள்ளூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகவும் அவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர். இறப்பின் காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை. விசாரணை தொடர்கிறது.

நாளை தாம் குடும்பத்தாரோடு லண்டன் செல்வதாகவும் மகன் 2015ஆம் ஆண்டிலிருந்து அங்கு வேதியல் துறையில் படித்து வருவதாகவும் ஸைனால் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker