Latestமலேசியா

ஆற்றில் நச்சு இரசாயனக் கழிவு- மூவருக்குப் பிணைத் தொகை குறைப்பு!

ஜோகூர் பாரு, மார்ச் 27 – பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்றில் நச்சு ரசாயணக் கழிவைக் கொட்டிய வழக்கில் இருவருக்குப் பிணத் தொகை குறைக்கப்பட்டு சிங்கப்பூர்காரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 25ஆம் தேதி, செஷன்ஸ் நீதிமன்றத்தில், பிடெக் ரிசோர்சர்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர் இயக்குநர் வாங் ஜின் சாவோ, உள்ளூர் இயக்குநர் யாப் யோக் லியாங் ஆகியோர் மீது 32 குற்றச்சாட்டுகளும் லோரி ஓட்டுநர் என்.மரியதாஸ் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் அவர்களின் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அகமட் மாட் ஷாஹிட், மரியதாஸின் ரிம. 100,000 பிணைத் தொகையை ரிம.30,000 ஆகவும், யாப்பிற்கான பிணைத் தொகையை ரிம. 250,000 -லிருந்து ரிம. 150,000க்கும் சிங்கப்பூர்க்காரரான வாங்கிற்கு ரிம. 250,000 பிணைத் தொகையில் விடுவிக்க உத்தரவிட்டார். வாங் பாசிர் கூடாங் போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker