Latestமலேசியா

அடிப்பின் உடலில் தன்னை தற்காத்த காயங்கள் இல்லை – மருத்துவர் சாட்சியம்

ஷா ஆலம், மார்ச். 28 – தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் தாக்கப் பட்டிருந்தால், தம்மைத் தற்காக்க முனைந்திருப்பார் என்று உடற்கூறு நிபுணர்
தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற, திடகாத்திரமான அடிப் அவசர வேளை மருத்துவ மீட்புச் சேவை வாகனத்தில் (இஎம் ஆர்எஸ்) இருந்து வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டிருந்தால் அதனை எதிர்த்து அவர் போராடி இருப்பார் என்றார் அவர்.

அடிப்பின் உடலை சவப் பரிசோதனை செய்த கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் உடற்கூறு நிபுணர் டாக்டர் அகமட் ஹாஃபிஸாம் ஹஸ்மி மரண விசாரணையின் போது சாட்சியம் அளித்தார்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள அவர் போராடி இருந்தால் அவருக்கு இன்னும் அதிகமான காயங்கள் ஏற்பட்டிருக்கும்.
பிடித்து இழுக்கப் பட்டதற்கான தடயங்கள் எதுவும் அவரின் உடலில் இல்லை.

அதே வேளையில் வாகனங்களுக்கு இடையே அவர் சிக்கிக் கொண்டதால் அவர் காயமடைந்திருக்கக் கூடிய சாத்தியமும் இல்லை என்பதையே அவரது உடல் காயங்களின் தன்மை காட்டுவதாகவும் டாக்டர் அகமட் குறிப்பிட்டார்.

இஎம்ஆர்எஸ் வேனின் முன் பகுதியில், பயணியின் இருக்கைக் கதவின் விளிம்பு கூராகவும் வலுவாகவும் செங்குத்தாகவும் தாம் இருந்ததைக் கண்டதாகவும் அதுவே அடிப்பின் மீது மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து நெருக்கியதால் 7 விலா எலும்புகள் முறிந்திருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அது போன்ற வலுவான 6 பொருள்களை ஆராய்ந்த பின்னரே அந்த முடிவுக்கு தாம் வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker