Latestவிளையாட்டு

அஸ்லான் ஷா ஹாக்கி: இறுதி மோதலில் இந்தியா- தென் கொரியா!

ஈப்போ, மார்ச். 28- இங்கு நடைபெற்றவரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவும் தென் கொரியாவும் களத்தில் இறங்கவிருக்கின்றன.

நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தின் வழி இந்தியா போலந்தை 7-3 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் தென் கொரியாவிடம் தோல்விக் கண்டது.

இந்த ஆண்டு மலேசியா, இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை ரசிகர்கள் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுவரை மலேசிய தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி போலந்தை 5-1 என்ற கோல் எண்ணிக்கையிலும் , ஜப்பானை 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.

இந்தியா, இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் மூன்றில் வென்று தென்கொரியாவுடனான சமநிலை கண்டது. அதே போன்று தென்கொரியாவும் 3 ஆட்டங்களில் வென்று ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டது.

இதன் வழி இந்தியா மற்றும் தென்கொரியாவும் தலா 10 புள்ளிகளைப் இறுதி சுற்றுக்கு தகுதி செல்லும் வாய்ப்பை பெற்றன.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker