Englishமலேசியா

யு.எம். மாணவர்களுடன் மோதல்: லொக்மான் மீது 3 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர், மார்ச்.28- மலாயா பல்கலைக் கழக மாணவர்களுடனான மோதல் சம்பவம் தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோ லொக்மான் அடாம் (வயது 47) மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

கடந்த மார்ச் 22ஆம் தேதி ஜாலான் பந்தாய் பாருவிலுள்ள அஜ்மால் உணவகத்தின் எதிர்புறம் இருக்கும் பஸ் நிலையத்தில் 23 வயதுடைய வோங் யான் கே என்ற மாணவர் வைத்திருந்த சுலோக அட்டையைப் பிடித்துக் கிழித்து, அவருக்கு வேண்டுமென்றே இழப்பை ஏற்படுத்தியதாக லொக்மான் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 426 ஆவது பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், அதிகப் பட்சமாக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதே இடத்தில் அதே நாள், மற்றும் அதே சமயத்தில் வோங் யான் கே என்ற அந்த மாணவரை, பின்னால் இருந்து கையால் கழுத்தை மடக்கி இறுக்கிப் பிடித்து தாக்கி அவருக்கு காயத்தை விளைவித்ததாக லொக்மான் மீதும் இதர நால்வர் மீதும் இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பெட்டாலிஜெயா அம்னோ டிவிசன் தலைவர் அப்துல் மத்தாலிப், ஒரு குமாஸ்தாவான சல்மோன் அரீப், வழக்கறிஞர் நிறுவன அலுவலக ஊழியரான முகம்மட் நோர்ஷக்கிபா, மற்றும் இன்னும் தலைமறைவாக இருந்து வரும் இன்னொரு நபர் ஆகியோரையும் சேர்த்து இந்தக் குற்றசக்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஐவர் மீதும் வோங்கிற்கு காயம் விளைவித்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளையில், முன்னாள் தாபோங் ஹாஜி அமைப்பின் தலைவர் அதுல் அஸீசின் சகோதரருமான முத்தாலிப் மீது மலேசியா கினி செய்தியாளர் சித்தி மரியம் முகம்மட் என்பவருக்கு காயம் விளைவித்ததாக தனிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker