Latestமலேசியா

அந்த டான்ஶ்ரீ வீட்டில் கொடுமை!- 3 பெண்கள் தப்பியோட்டம்!

காஜாங், மார்ச் 29 – டான்ஶ்ரீ அந்தஸ்து கொண்ட ஒருவரில் வீட்டில் கொடுமைக்கு ஆளானதால் மூன்று இந்தோனேசிய பணிப் பெண்கள் தூதரகத்தில் அடைக்கலம் நாடினர்.

வீட்டின் சுவரை ஏறிக் குதித்து, ஒருவரின் உதவியோடு அந்த மூவரும் இந்தோனேசிய தூதரகத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

25 வயதிலிருந்து 41 வயதான அந்தப் பணிப்பெண்கள் அந்த டான்ஶ்ரீ வீட்டில் 7 ஆண்டுகளாக வேலை செய்வதாகவும் அவரும் அவரின் மனைவியும் தங்களைக் கொடுமைப் படுத்தி வந்ததாகவும் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில் டான்ஶ்ரீயின் செயலாளரிடமிருந்து 3 கடப்பிதழ்களைப் கைப்பற்றி இருப்பதாக காஜாங் ஓசிபிடி அகமட் சாஃப்பி முகமட் யூசோப் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker