Latestஉலகம்

இந்தியாவின் விண்வெளி ஏவுகணை சோதனை: அமெரிக்கா என்ன சொல்கிறது

வாஷிங்டன், மார்ச்.29  விண்வெளியில் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும்  ஏவுகணைச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல் படுத்தியுள்ள நிலையில் அது குறித்து கருத்துரைத்த  அமெரிக்கா, விண்வெளியில் குவியும் குப்பைகள் குறித்து கவலை தெரிவித்தது

விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கோளை இந்தியா சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி என்ற சோதனையை இந்தியா நடத்தியது.  இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.

இந்நிலையில் மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.

அதேசமயம் செயற்கை கோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இச்சோதனை வடிவமைக்கப் பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம்.

தாழ்வான வளி மண்டலத்தில் இச்சோதனை நடத்தப்பட்டிருப்பதால் விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும் உடைந்து சிதறிய செயற்கைகோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker