Latestமலேசியா

கர்ப்பால் சிங் மீதான நிந்தனை வழக்கு தள்ளுபடி!-

புத்ரா ஜெயா, மார்ச் -29 மறைந்த வழக்கறிஞர் கர்ப்பால் சிங் மீதான நிந்தனை வழக்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றமும் முறையீட்டு நீதிமன்றமும் தவறாக அளிக்கப்பட்ட குற்றத் தகவல்களின் அடிப்படையில் தவறான தீர்ப்பை வழங்கியிருப்பதால் அதனை ரத்து செய்வதொடு குற்றத்தையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தது.

கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி டான்ஶ்ரீ ஸஹாரா இப்ராஹிம், சபா சரவாக் தலைமை நீதிபதி டத்தோஶ்ரீ டேவிட் வோங் டாக் வா, டான்ஶ்ரீ ரம்லி அலி, டத்தோ அலிஸாத்துல் கிர் ஓஸ்மான் கைருடின், டத்தோ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம், டான்ஶ்ரீ இட்ருஸ் ஹருண் மற்றும் நளினி பத்மநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு அத்தீர்ப்பை வழங்கியது.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி 21இல் 2009 ஆம் ஆண்டு மந்திரி பெசார் பிரச்சினையில் பேரா சுல்தானுக்கு எதிராக கர்ப்பால் சிங் தேச நிந்தனையாகப் பேசியதாக அவருக்கு ரிம. 4,000ஐ அபராதமாக விதித்தது.

அதே ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கர்ப்பால் சிங் கொல்லப்பட்டார்.

2016ஆம் ஆண்டு மே 30இல் முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரிம. 1,800ஆகக் குறைத்தது. அதில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதி மட்டும் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker