Latestஉலகம்

சீனாவுடன் தொழில்நுட்ப உறவுப் டிரம்பை சந்தித்தார் சுந்தர் பிச்சை

வாஷிங்டன், மார்ச்.29- கூகுள் தனது தொழில் நுட்பங்களை சீனாவிற்கு விரிவுப் படுத்துவது தொடர்பில் நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து ஆலோசித்துள்ளார்.

இந்தச்  சந்திப்பு, இடம் பெற்றதை டொனால்ட் டிரம்ப் தனது டுவிரட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப் படுத்தினார்.

நேற்றைய தினம் இடம் பெற்ற இச்சந்திப்பில்  சீனாவுடனான அரசியல் பிரச்சினைகளையும் தாண்டி கூகுளை விரிவுப் படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker