Latestமலேசியா

பள்ளிகளில் ரொக்கமில்லா நிதி நடைமுறை- மஸ்லீ மாலிக்

புத்ரா ஜெயா, மார்ச் 29 – எதிர்காலத்தில் பள்ளிகளில் ரொக்கமில்லா நிதி நடைமுறை நடப்புக்கு வரும் என கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

டாமான்சாரா பெட்டானாவில் உள்ள புக்கிட் லஞ்சான் தேசிய பள்ளியில் பரீட்சார்த்தமாக அத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அது படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பண பட்டுவாடா அட்டைகளைத் தவிர்த்து வேறு மாதிரியான முறையில் பணம் எடுத்து, செலுத்தும் நடைமுறை வரும்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க முடியும் என்றும் இந்த ஊக்குவிப்புத் திட்டமானது 10,180 பள்ளிகளில் 79 விழுக்காட்டுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker