Latestவிளையாட்டு

அஸ்லான் ஷா ஹாக்கி இறுதியாட்டம்: தென்கொரியாவிடம் இந்தியா தோல்வி!

ஈப்போ, மார்ச். 30- இங்கு நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் தோல்வி கண்டு சாம்பியனாகும் வாய்ப்பை இந்தியா கைநழுவ விட்டது.

இங்கு நடைபெற்ற அதன் இறுதி ஆட்டத்தில் தென்கொரியா 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் இந்தியாவை தோற்கடித்தது.

இப்போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னணியில் இருந்தது. அடுத்து மறு பாதி ஆட்டத்தில் தென்கொரியா ஒரு கோலை அடுத்து ஆட்டத்தை சம நிலைக்கு கொண்டு வந்ந்து.

வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்ய பினால்டி வழி முடிவு எடுக்கப்பட்டது. அதன் வழி தென்கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

மலேசியாவிற்கு மூன்றாவது இடம்

இதனிடையே இந்தப் போட்டியில் மலேசியா மூன்றாவது இடத்தை பிடித்தது. மூன்றாம்நிலைக்கான ஆட்டத்தில் கனடாவை 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் மலேசியா வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 6-1 என்ற கோல் எண்ணிக்கையில் போலந்தை வீழ்த்தி ஐந்தாவது இடத்தை பிடித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker