Englishஉலகம்

நான்கே மாதத்தில் பிரியங்கா- நிக் ஜோனஸ் விவாகரத்தா?

நியூயார்க், மார்ச். 31- திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவை இளம் பாடகரான அவருடைய கணவர் நிக் ஜோனஸ் விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக பிரபல அமெரிக்க இதழ் பரப்பரப்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வயதில் தன்னை விட 10 வயது இளைய அமெரிக்கா பாடகர் நிக் ஜோனஸை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் ஒத்துப் போகாததால் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ‘ஓகே’ என்ற பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் பிரியங்கா சோப்ரா அமைதியான பெண் என்றும் தனக்கு ஏற்ற முறையில் நடந்து கொள்வார் என்றும் கருதியே நிக் ஜோனஸ் திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் பிரியங்கா அடிக்கடி கோபமடைவதால் பிரச்னைகள் எழுந்துள்ளன.

திருமணம் முடிந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் சண்டையிட ஆரம்பித்துள்ளார். வேலை, விருந்து, ஒன்றாக நேரம் செலவழிப்பது என அனைத்திலும் மோதல் நிலவுவதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய கட்டுப்பாட்டில் நிக்கை வைத்திருக்க பிரியங்கா நினைப்பதால் அவரை புரிந்து கொள்ள முடியாமல் நிக் திணற ஆரம்பித்துள்ளார் என அந்தச் செய்தி கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker