Latestஉலகம்

பாலியல் வன்மம்: இந்திய பாதிரியாருக்கு அமெரிக்காவில் 6 ஆண்டு சிறை!

வாஷிங்டன், மார்ச்.31- அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இந்திய பாதிரியாருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தேவாலயப் பணிக்காக இந்தியாவைச் சேர்ந்த ஜோன் பிரவீன் என்ற 37வயதுடைய பாதிரியார் சேர்ந்தார்.

இவர் 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோன் பிரவீன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீதான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்க 6 ஆண்டு சிறை தண்டனையை அமெரிக்கா நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தண்டனை பெற்ற ஜோன் பிரவீன் கூறுகையில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்து நான் என் மன்னிப்பை கோருகிறேன். மன்னிப்பு இதற்கு சரியாகாது என்று எனக்குத் தெரியும். இனி நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker